×

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 4.15 லட்சத்தில் நவீன கூரை அமைக்கும் பணி: வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு

பள்ளிப்பட்டு: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழைய கட்டிடத்தில் நவீன கூரை அமைக்கும் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடங்களின் மேற்கூரையில் சீமை ஓடுகள் அமைக்கப்பட்டிருந்தது. கால போக்கில் சீமை ஓடுகள் உடைந்து மழை காலங்களில் மழைநீர் வகுப்பறைகளில் தேங்கி மாணவர்கள் அவதிப்படும் நிலை இருந்தது. இந்நிலையில், சீமை ஓடுகள் உள்ள பள்ளி கட்டிடங்கள் நவீன கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் ஒரு பகுதியாக ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் கா பொன்னியம்மன் கோயில் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டியம் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 4.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய பொறியாளர் சுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் உடன் இருந்தார்.

The post ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 4.15 லட்சத்தில் நவீன கூரை அமைக்கும் பணி: வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Currency Union ,Union ,
× RELATED விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5...